InsureMe பற்றி
வெளிப்படைத்தன்மை மற்றும் இலகுவாக அணுகும் திறனுடன் இலங்கை காப்புறுதித் துறையில் ஏற்படுத்தப்படும் புரட்சிகரமான அறிமுகம்.
InsureMe பற்றி
ஸ்தாபகர்கள்
விபுல தர்மபால மற்றும் இந்திக பிரேமதுங்க ஆகியோரின் சிந்தனை வெளிப்பாடாக InsureMe அமைந்துள்ளதுடன், முன்னோடி ஸ்தாபகர்களாகத் திகழ்கின்றனர். காப்புறுதித் துறையில் வாடிக்கையாளர்களின் தீர்மானமெடுத்தல்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட டிஜிட்டல் நுட்பங்கள் போதியளவில் காணப்படாமையை இனங்கண்டு, InsureMe ஐ நிறுவும் பணிகளை ஆரம்பித்திருந்தனர். ஆரம்பத்தில் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (IRCSL) காப்புறுதி முகவராக பதிவு செய்திருந்ததுடன், இலங்கையில் முதன்முறையாக ஒன்லைன் காப்புறுதி வகைப்படுத்துநர் கட்டமைப்பை அறிமுகம் செய்திருந்தது.
காப்புறுதித் துறையில் பரந்தளவு அனுபவத்தைக் கொண்ட நிரஞ்ஜன் மாணிக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்ற அஞ்ஜன சோமதிலக ஆகியோர் இவர்களுடன் இணைந்து கொண்டதுடன், நிறுவனத்துக்கு அவசியமான நுட்பவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகின்றனர்.